உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, November 5, 2019

எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆய்வுக்கூட்டம்

 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2019-20 ஆண்டுக்கான  அரவைக்கான கரும்பு துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆலையின் நிர்வாக குழு தலைவர் பாலசுந்தரம்  தலைமையில் கரும்பு துறை களப்பணி ஆய்வு கூட்டத்தை நடத்தினர்.   ஆலையின் தலைமை கரும்பு அதிகாரி மணிமாறன் ஆய்வுனை தொடங்கி வைத்தார்.ஆலையின் கரும்பு அரைவை டிசம்பர்  15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில்  கரும்பு  துறையில் 3 லட்சம் டன்கள் கரும்பு  அரவை செய்ய கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.  புதிதாக சேர்க்கப்பட்ட மேலபாலையூரில் கரும்பு கோட்டத்தில் 40 ஆயிரம் டன்கள் கரும்பு அரவைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலக்கு ஆய்வு கூட்டத்தில் கரும்பு அலுவலர்கள் மற்றும்  களபணியாளர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர். களப்பணி ஆய்வு கூட்ட முடிவில் ஆலைபகுதி கரும்பு அலுவலர் ரவிகிருஷ்ணன் நன்றி கூறினார் . மேலும்  2019 -2020  அரவைப்பருவத்திற்கு கடந்த ஆண்டு போல் இல்லாமல்  ஆலை அங்கத்தினர்களின் கரும்பு சப்ளைக்கான கிரையதொகை ஆலை துவக்கத்தில் வழங்கப்பட்டது போலவே கரும்புக்கான கிரயத்தொகை ஆலைக்கு இறுதி வரை கரும்பு சப்ளை செய்யும் ஆலை அங்கத்தினர்களுக்கும் வழங்கப்படும் என ஆலையின் தலைவர் உறுதியளித்தார்.