உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, December 6, 2018

பொதுப்பணித்துறை அதிகாரி துணையுடன் மணல் கடத்திய லாரியை மடக்கிப்பிடித்த சேத்தியாத்தோப்பு போலீசார்

பொதுப்பணித்துறை அதிகாரி துணையுடன் மணல்கடத்திய லாரியை மடக்கிப்பிடித்த சேத்தியாத்தோப்பு போலீசார்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடுபகுதியில் சென்னை சாலையில் சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ஜவஹர்லால் உத்தரவின் பேரில் சேத்தியாத்தோப்பு எஸ்ஐ அரங்கநாதன்,எஸ்பி தனிப்பிரிவு ஏட்டு செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது  டிஎன்32,சி.6067 என்ற பதிவெண் கொண்ட லாரியை சோதனையிட்டபோது அந்த லாரியில் மணல் செல்வதை கண்டனர்.இதனையடுத்து மணல்கொண்டுசெல்வதற்கான ஆவணங்களை சரிபார்த்தபோது அந்த ஆவணங்களின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே மணல்லாரியை காவல் நிலையம் கொண்டுவந்தனர்.தொடர்ந்த விசாரணையில் இந்த லாரியானது அணைக்கரையிலிருந்து கடலூருக்கு மண்லகொண்டுசெல்லப்படுவதாக அதன் டிரைவர் அரியலூர் மாவட்டம் அணைக்கரை நடுவேம்புக்குடி பகுதியை சேர்ந்த கங்காசலம் மகன்  ராஜா என்பவர் தெரிவித்தார்.மேலும் மணல்செல்வதற்கான ஆவணங்களை நுணுக்கமாக சோதித்ததில் மணல் அள்ளிச்செல்வதற்கான அனுமதியானது இந்தாண்டு முதல் மாதம் பெறப்பட்டிருப்பதும் இந்த அனுமதியை வைத்துக்கொண்டு லாரியில் தற்போது வரை அணைக்கரையிலிருந்து கடலூருக்கு மணல் ஏற்றிச்செல்லப்பட்டிருப்பதாக அதன் ஓட்டுநர் ராஜா தெரிவித்துள்ளார்.இதற்கு பின்னனியில் தற்போது அணைக்கரையில் பணியில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தந்த ஐடியாவில்தான் இவ்வாறு பலமுறை மணல் கடத்தல் நடந்துள்ளது என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததையடுத்து டிரைவர் ராஜா உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் மணல்கடத்தலுக்கு பொதுப்பணித்துறை அதிகாரியே துணைபோயிருப்பதைக்கண்ட அப்பகுதியினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.