உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, December 10, 2018

தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி பலாத்காரம் செய்ய முயற்சி காமகொடூரன் கைது



தண்ணீர் எடுக்கசென்ற சிறுமி பலாத்காரம் செய்ய முயற்சி,காமகொடூரன் கைது.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆயங்குடி மதுவடி தெருவைச்சேர்ந்தவர் சதாசிவம் கூலித்தொழிலாளி.இவரது மகள் கோமதி(17) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையன்று விடுமுறை தினம் என்பதால்  வீட்டில் இருந்த கோமதி  தண்ணீர் எடுத்துவர வீட்டின் எதிரே சற்று தூரத்தில் உள்ள குச்சி வாய்க்காலில் கையில் குடத்துடன் சென்று தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தார்.அப்போது காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ரெட்டியூர் தெற்கு தெருவைச்சேர்ந்த புலவேந்திரன் மகன் பிரகாஷ்(24) திடிரென்று கோமதியை வாய்க்காலில் தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.அப்போது கோமதி தன்னை விட்டுவிடும்படி சத்தம்போட்டார். கோமதி பயங்கரமாக அலறுவதைக்கண்ட அக்கம்பக்கத்தினர்,வயலில் வேலை செய்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து அவரை காப்பாற்றினர்.மேலும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற பிரகாஷ்சை  பிடிக்க முயன்போது அவன் தப்பி ஓடிவிட்டான். அதற்குள் கோமதிக்கு  உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம்கொட்டியது.உடனடியாக அவர் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவ மனைக்குகொண்டு செல்லப்பட்டு தற்காலிகமுதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு கோமதிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ஜவஹர்லால் உத்தரவின்பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆக்னீஸ்மேரி வழிக்காட்டலில் சிகிச்சைப்பெற்று வரும் கோமதி கொடுத்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர்காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி தலைமையில் ரெட்டியூரில் பதுங்கியிருந்த பிரகாஷை கைது செய்து காவல்நிலையம் கொண்டு வந்தனர்.கைது செய்யப்பட்ட பிரகாஷ்மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதியப்பட்டு உடனடியாக அவர் கடலூர் மகிளாகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் கேப்பர்மலை சிறையில் அடைக்கப்பட்டார்.