உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, November 14, 2018

சேத்தியாத்தோப்பு மனோவித்யாலயா பள்ளியில் மாணவர்களின் அறிவியல் திறன் மேம்பாட்டு ராக்கெட்டு விடும் நிகழ்ச்சி




சேத்தியாத்தோப்பு மனோ வித்யாலயா பள்ளியில் மாணவர்களின் அறிவியல் திறன்மேம்பாட்டு ராக்கெட் விடும் நிகழ்ச்சி.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு விருத்தாசலம் சாலையில் மனோவித்யாலயா பள்ளி அமைந்துள்ளது.இப்பள்ளியில் நேற்று மதியம் மாணவர்களின் அறிவியல் திறன் மேம்படுத்துதல்,இளம் வயது கண்டுபிடிப்பாளர்கள்,அறிவியல் மேதைகளை உருவாக்கும் பொருட்டு மாணவர்களுக்கு ராக்கெட் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் நாகராஜன் தலைமை வகித்தார்.பள்ளியின் தலைமை ஆசிரியர் எட்டுவர்டு முன்னிலை வகித்தார்.இந்த ராக்கெட்டு விடும் நிகழ்ச்சிக்கு முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு நேற்று முன்தினம் சிறப்பு பயிற்சியாக ராக்கெட் உருவாக்கம் செய்தல்,ராக்கெட் இயங்கும் முறை,இதனால் உருவாகும் தேசநலன்,மற்றும் மக்கள் வாழ்க்கை நலம் உள்ளிட்டவை மாணவர்களுக்கு விளக்கிக்கூறப்பட்டு இந்த ராக்கட் உருவாக்கப்பயிற்சி நடைபெற்றது.இரண்டு கட்டங்களாக நடைப்பெற்ற பயிற்சியில் முதல் கட்டம் ராக்கட் உருவாக்குதல் மற்றும் செயல்முறை விளக்கம், இரண்டாவது கட்டத்தில் விமானம் இயக்கம், அதன் உருவாக்கம் பற்றியும் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கமளித்து மாணவர்களை மினியேச்சர் விமானங்கள் உருவாக்க தயார்படுத்தப்பட்டது.இதனையடுத்து நேற்று நடைபெற்ற ராக்கெட் விடும் நிகழ்ச்சியில் இந்த பயிற்சியை வழங்கி வரும் பெங்களூர் இன்டுஸ்புரோ (பி) நிறுவனத்தின் மேலாளர் அப்துல்ஹக்கீம்,ராக்கட் ஏவுதல் பொறியாளர் தியானேஷ்வரன் ஆகியோர் மாணவர்களுக்கு ராக்கெட் ஏவும் விதத்தை செயல்விளக்கத்தில் செய்து காட்டினர்.பின்பு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களின் பெற்றோர்,ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.