புயல்பாதிப்புக்கு மனித உரிமைகள் கழம் பல்வேறு நிவாரணபொருட்கள் அனுப்பி வைப்பு.தமிழகத்தில் நாகை,தஞ்சை,திருவாருர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கஜா புயலால் பலத்த பாதிப்படைந்துள்ளது.அந்த மாவட்டத்து மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.இந்நிலையில் அரசு அதிகாரிகள் மக்களின் துயர் துடைத்திடும் பணியில் இரவு பகலாக அயராது பாடுபட்டு வரும் வேளையில் அரசு அதிகாரிகளோடு பல்வேறு தன்னார்வலர்கள்,அரசியல் கட்சியினர் இணைந்து புயல்பாதிப்புக்கான நிவாரணப்பொருட்களை அனுப்பி வருகிறார்கள்.அதுபோல் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு நகரிலிருந்து நாகை,தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மனிதஉரிமைகள் கழகம் அரசியல்கட்சி,மனித உரிமைகள் கழம் சர்வதேச அமைப்பு ஆகியவற்றின் மூலம் அரிசி,காய்கறி,மருந்துகள்,துணிகள் உள்ளிட்டவை மனித உரிமைகள் கழகம் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் கேடிஆர்விஜயராஜன்,தலைமையில் மாநில அமைப்புச்செயலாளர் ஆனந்த்பாபு,யோகராஜ் ஆகியோர் முன்னிலையில் வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மனித உரிமைகள் கழக நிர்வாகிகள் கலையரசன்,சுரேஷ்,பந்தளரசன், வெங்கடேசன்,கிருஷ்ணமூர்த்தி,விஜயராஜன்,முரளி,ஜேப்பிபன்னீர்செல்வம்,வளையமாதேவி வேலன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...