உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, November 20, 2018

கடலூர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழில் பாதுகாப்பு மையம் ஏற்படுத்த அனைத்து குலாலர் மக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை

கடலூர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழில் பாதுகாப்பு மையம் ஏற்படுத்த கோரிக்கை.தமிழகத்தில் மண்பாண்ட தொழிலாளர்களர் தற்போதைய சூழலில் மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்து வருகிறார்கள்.அவர்களுக்கான தினசரி வாழ்வாதாரத்தேவைகளை முழுமையாக நிவர்த்திசெய்ய இயலாதவர்களாகவும்,அவர்கள் தயாரிக்கும் மண்பாண்ட பொருட்கள் போதிய விற்பனையில்லாமலும் போவதால் அவர்கள் பெரிதும் துன்பமடைந்து வருகிறார்கள்.களிமண்ணை முக்கிய மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் பொங்கல் பானை, கார்த்திகை தீப அகல் விளக்கு போன்றவைகள் தான் இப்போது வரை அவர்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை கொடுக்கும்படியான விற்பனையை தந்து வந்தபோதிலும், இன்று அவைகளின் பயன்பாடும் குறைந்துபோய் விட்டதால் அவர்கள் தாங்கள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள்.இந்நிலையில் தமிழக அரசானது பருவமழைக்காலத்தில் மண்பாண்ட தொழில் செய்து வரும் குலாலர்களுக்கு மழைக்கால உதவித்தொகையாக ரூஐந்தாயிரம் வழங்கி வருகிறது.இந்த உதவித்தொகையால் ஓரளவிற்கு அரசு வழங்குகின்ற உதவியாக இருந்தாலும் இதனால் தங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் சோகத்துடன் தெரிவிக்கிறார்கள்.இவ்வாறான சூழலில்ல கடலூர் மாவட்டத்தில் சுமார் மண்பாண்ட தொழிலை நம்பியுள்ள இருபதாயிரம் குடும்பங்களைச்சேர்ந்தவர்கள் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர்,சி.சாத்தமங்கலம்,வடப்பாக்கம்,வெய்யலூர்,ஓடாக்கநல்லூர்,சாவடி,ஒரத்தூர்,வடஹரிராஜபுரம்,ரெட்டிச்சாவடி,கல்குணம்,பண்ருட்டி,காட்டுமன்னார்கோவில்,உடையார்குடிதெற்கிருப்பு,திட்டக்குடி,வேப்பூர்,விருத்தாசலம்,ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சேர்த்துஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மண்பாண்ட குடும்பங்கள் வசித்து  வருகிறார்கள்.இவர்களை அரசு பாதுகாத்திடும் நோக்கில் தற்போது வழங்கி வரும் மழைக்கால உதவித்தொகையான ஐந்தாயிரத்திலிருந்து அதனை உயர்த்தி பத்தாயிரமாக வழங்கிடவேண்டும் என்றும் இவர்களை ஒருங்கிணைத்து மண்பாண்ட தொழில்பாதுகாப்பு மையத்தை ஏற்படுத்தி குலாலர் மக்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தி தரவேண்டும் என அனைத்து குலாலர் மக்கள் இயக்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.