உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, November 17, 2018

அடிப்படை வசதியின்றி தொற்று நோயின் பிடியில் எறும்பூர் கிராமம்



அடிப்படை வசதியின்றி தொற்று நோயின் பிடியில் எறும்பூர் கிராமம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே எறும்பூர் கிராமம் உள்ளது.இக்கிராமத்திலுள்ள அம்பேத்கர் நகர் மாரியம்மன்கோவில் தெருவில் முந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.இந்த தெருவில் கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக சரியான சாலைவசதி,மழைநீர் வடிகால் வசதி,பொது சுகாதார வசதி,குடிநீர் வசதி என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் பெரும் வேதனையடைந்து வருகிறார்கள்.தற்போது சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் மாரியம்மன்கோவில் தெருவில் நான்கடி ஆழத்திற்கு மழை வடிகால் நீர் தேங்கியிருப்பதால் வடிவதற்கு வழியில்லாமல் துர்நாற்றம் வீசுவதாக உள்ளது.மேலும் இந்த தேங்கியிருக்கும் தண்ணீரில் அருகிலுள்ள வீடுகளின் கழிவறை நீரும் சேர்ந்து தேங்குவதால் இப்பகுதியில் உள்ள பலருக்கும் பல்வேறு விதமான மர்மக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.இந்த அம்பேத்கர் நகரின் மிக முக்கிய பிரச்னையாக இருப்பது கிராமத்திற்கென்று பொது கழிவறை வசதி இல்லாததால் அனைவரும் நீண்டதூரம் சென்று திறந்த வெளியையே கழிவறையாக பயன் படுத்தி வருகிறார்கள்.இருக்கும் பொதுக்கழிவறை பயன்பாட்டுக்கு இல்லாமல் கடந்த பல ஆண்டுகளாக பூட்டுப்போடப்பட்டு பாழடைந்துபோய் உள்ளது.இப்போது அதில் விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கிறது.கிராமத்திற்கு என்று சுத்தமான குடிநீர் வசதியில்லாததால் வரும் சுகாதரமற்ற முறையிலான குடிநீரையே பயன்படுத்தி வருகிறார்கள்.அம்பேத்கர் நகர்க்கு என்று உள்ள சாலையை கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்துவதற்கு லாயக்கற்றதாக இருந்து வருகிறது.அதிலும் புதிய சாலைப்போடுவதற்கு சாலைய பொக்லைன் மூலம் பறித்துபோட்டு இப்போது கற்கள் பெயர்ந்து இருப்பதால் கிராமமக்கள் உள்பட முதியவர்கள்,குழந்தைகள் நடப்பதற்கே சிரமப்படுகிறார்கள்.மேலும் இருசக்கர வாகனங்கள் செல்லவும் முடியாத நிலைமை.இதுமட்டும் அல்லாமல் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் துருப்பிடித்து இடிந்து விழும் நிலையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது.கிராமத்தில் வெளிப்பக்கத்தில் இருக்கவேண்டிய மண்புழு வளர்ப்புக்கொட்டாய் தற்போது கிராமத்தின் நடுவில் இருப்பதால் அது இப்போது மதுக்குடிக்கும் பாராகவும்,குப்பைகளும் சேர்ந்துள்ளதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாயிருக்கிறது.இதுகுறித்து இக்கிராமத்தின் அம்பேத்கர் நகர் மக்கள் தெரிவிக்கும்போது இந்த அனைத்து பிரச்னைகளும் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.இதனை சரிசெய்யக்கோரி நாங்கள் புவனகிரி மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் பலமுறை மனுவாக கொடுத்தும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எங்களது கிராமத்தில் நாங்கள் இருக்கும் பகுதி வேண்டும் என்றே ஒதுக்கப்படுவதாக நினைக்கிறேம்.இனியும் நாங்கள் பொறுமையாக இருக்கப்பபோவதில்லை.எங்கள்கிராமத்தில் அம்பேத்கர் நகர் மாரியம்மன்கோவில் தெரு உள்ளிட்டவற்றின் அடிப்படை பிரச்னைகளுக்காக தொடர் சாலை மறியல் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகையிடுவதைத்தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.