உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, November 16, 2018

சேத்தியாத்தோப்பில் பாலத்திலிருந்து குழந்தையை தூக்கி வீசிய தாயால் பரபரப்பு




சேத்தியாத்தோப்பில் பாலத்திலிருந்து குழந்தையை தூக்கி வீசிய தாயால் பரபரப்பு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் நேற்று மதியம் போக்குவரத்து நிறைந்த புதியபாலத்தில் நடந்துசென்று கொண்டிருந்த ஒருபெண் திடிரென்று தனது இடுப்பிலிருந்த குழந்தைய தூக்கிப்போட்டார்.பின்பு அவரும் பாலத்திலிருந்து குதிக்க முற்பட்டார்.அப்போது அவ்வழியே சென்ற சிலர் வேகமாக சென்று அப்பெண்ணை பிடித்து காப்பாற்றினர்.அப்போது பாலத்திலிருந்து தூக்கிவீசப்பட்ட குழந்தையானது யதேச்சையாக பாலத்தின் அடியில் தூண்டிலில் ஆற்றுநீரில் மீன்பிடித்துக்கொண்டிருந்த சேத்தியாத்தோப்பு கிளாங்காடு கிராமத்தை சேர்ந்த தேவநாதன் என்பவர் கண்இமைக்கும் நேரத்தில் பாய்ந்து சென்று மேலேயிருந்து விழுந்த குழந்தையை பத்திரமாக பிடித்துக்கொண்டு விழுந்தார்.அப்போது கீழே விழுந்த தேவநாதனுக்கு வலது முட்டிக்காலில் காயம் ஏற்பட்டது.நல்லவேலையாக குழந்தைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் உயிரோடு காப்பாற்றப்பட்டது.இந்நிலையில் அருகிலிருந்தவர்கள் அவர்களை சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.அப்போது அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்களைப்பற்றிய விசாரித்தபோது அப்பெண் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள காவலக்குடி வடக்குதெருவைச்சேர்ந்த பழனிவேல் மகள் சபீதா என்பதும், இவருக்கும் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது என்றும், திருமணத்திற்கு பிறகு வலைகாப்பிற்காக பிறந்த வீடு வந்த சபீதாவை ஆண்குழந்தை பிறந்து ஒன்றரை வருடம் வரை கணவர்  வந்து அழைத்து செல்லவில்லை என்பதால், சபீதா கடும்வேதனையில் இருந்துள்ளார் என்றும் அப்போது இவர் காவலக்குடியிலிருந்து சேத்தியாத்தோப்பிற்கு தனது குழந்தையுடன் வந்து சேத்தியாத்தோப்பு புதியபாலத்தில் நடந்து சென்று பாலத்திலிருந்து குழந்தையை ஆற்றில் தூக்கிவீசிவிட்டு தானும்  குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்று அருகிலிருந்தவர்கள் கூறினார்கள்.இதனையடுத்து சபீதாவின் குழந்தையை ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தேவநாதன் உயிரோடு காப்பாற்றியதற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.இச்சம்பவத்தால் சேத்தியாத்தோப்பு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.