உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, November 19, 2018

மனவலிமை தேவை..



கடலூர் மாவட்டம் பலமுறை இயற்கை சீற்றங்களை சந்தித்து இருக்கிறது. அதனால் பொதுமக்கள், வியாபார நிறுவனத்தார், மீனவர்கள், விவசாய பெருமக்கள் பல ஆயிரம் கோடி இழப்புகளை சந்தித்து இருக்கிறார்கள்.

தற்போது வந்த கஜா புயலும் கடலூருக்கு வரும் என்று எதிர்பார்த்தார்கள். கடலூர் மக்களும் அஞ்சி கொண்டே இருந்தார்கள். 

ஆனால் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை கஜா புயல் அடைந்து சென்றதால் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் பாதிக்கப்பட்ட போது நூற்றுக்கும் மேலான கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க ஒரு மாத காலம் ஆனது. நகர் புறங்களில் 15-க்கும் மேற்பட்ட நாட்கள் ஆனது. பெரிய அளவில் வெளியாட்களின் உதவி இல்லை. 

ஆனால் தற்போது 7ஆயிரம் மின்கம்பங்கள் முன்கூட்டியே அரசு ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள். அசுர வேகத்தில் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். 

ஆனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது.. அரசு ஊழியர்கள் பணியாற்ற தடையாக இருக்குமே ஒழிய.. வேறு எதற்கும் உதவாது.

அரசியல் கட்சிகள் பொதுநல அமைப்புகள்
அம்மக்களுக்கு முதலில் குடிநீர், உணவு, உடமைகள், மற்றும் இதர பொருட்களை கொடுத்து உதவி செய்யுங்கள். 

ஆனால் உதவிப்பொருட்களோடு செல்லும் போது பாதுகாப்போடு செல்லுங்கள்.. இல்லையெனில்  உதவி பெறும் மக்களால் பிரச்சினைகள் வரலாம் என்பது எச்சரிக்கை.

இன்னும் புயல்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.. அது எங்கு எப்போது தாக்குதல் நடத்தும் என்பது இயற்கைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்..

அதனால் எதனையும் எதிர்கொள்ளும் 
மன வலிமையை இறைவன் அனைவருக்கும் கொடுத்தருள வேண்டும்..