உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, November 15, 2018

ஆபத்தான நிலையில் பாழடைந்த கட்டிடம் இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்*


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சேரி தெருவில் இந்தியன் வங்கிக்கு அருகில் உள்ள ஒரு  தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பாழடைந்த கட்டிடம் முக்கிய கடைவீதி பகுதியில் அமைந்துள்ளது இப்பகுதியில் ஜவுளி நிறுவணங்கள்
வணிக வளாகங்கள்
மேலும் பாத்திரக்கடைகள் நிறைந்த மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியாகும் இந்த கட்டிடம் கிட்டத்தட்ட சுமார் 100 வருடங்களுக்கு பழமை வாய்ந்த கட்டிடமாக பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது தற்போது கஜா புயலின் வருகையொட்டி மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகின்ற  காற்றின் வேகத்தில் இந்த கட்டிடத்தை பாதிப்புக்குள்ளாகி கடைவீதியில் நடமாடுகின்ற பொதுமக்களுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடும் என்பதனால் இது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விரைந்து சென்று அக்கட்டிடத்தை பார்வையிட்டு அந்த கட்டிடத்தை இடிக்க அந்தக் கட்டட உரிமையாளர்களுக்கு அறிவுறு

த்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் மேலும் பேரூராட்சி நிர்வாகத்தினரால் இந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது யாரும் பிரவேசிக்கக் கூடாது என அறிவிப்பு நோட்டீசும் அதில் ஒட்டப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இருந்தும் அதன் கீழ்தளத்தில் வாடகைக்கு கடை விடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இதனால்  வருகின்ற காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற பேராபத்தை தவிர்க்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்