உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, November 18, 2018

மின்கம்பம் அடியோடு சாய்ந்ததால் மின்கம்பத்தில் மேலே வேலை பார்த்துக் கொண்டிருந்த மின் ஊழியர் சம்பவ இடத்தில் பலியானார்



கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான மாத்தியார் வீதியில்  புயலுக்குப்பின் மின் கம்பம் பராமரிப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது அப்போத காட்டுமன்னார்கோயில் மின்சார அலுவலகத்தில் ஒப்பந்ததாரராக
(காண்டிராக்ட்)
வேலை பார்த்துக் கொண்டிருப்பவர் சோமசுந்தரம் வயது 48 இவர் மின்கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது மின்கம்பம் அடியோடு முறிந்து விழுந்ததில் சோமசுந்தரம் பரிதாபமாக அதே இடத்தில் பலியானார் கீழக்கடம்பூர் காமராஜர் வீதியில்
வசித்து வந்த இவருக்கு செல்வி என்ற மனைவியும் 
அருள்,மணி,திரு என்ற மகன்களும்
திவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர் இவர் மின்துறையில் ஒப்பந்ததாரராக கடந்த பத்து வருடங்களாக காண்ட்ராக்டில் வேலை பார்த்து வருகிறார் என்பது
குறிப்பிட தக்கது தகவலறிந்த உறவினர்கள் அவர் உடலை எடுத்து வந்து காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில்  காவல்துறையினர் சம்பவத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது தரமான
மின்கம்பங்கள் இல்லாததாலும் மின்கம்பங்கள் மின்வயர்கள் சரியாக பராமரிப்பு
செய்யாத மின்சார
துறையின் அலட்சிய போக்கே இவ்விபத்துக்கு காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்களும்,பொதுமக்களும் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க மின்சார வாரியம் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்பதே அணைவரின்
எதிர்பார்ப்பு