உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, December 14, 2018

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக்கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக்கூட்டம். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம்  வட்டம்   ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் அலுவலக வளாகத்தில் ஸ்ரீமுஷ்ணம் அனைத்து வணிகர்கள் மற்றும் பேரூராட்சித்துறையினர் கலந்துகொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்றது.இதில் பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகா தலைமை வகித்தார்.
வர்த்தக சங்க தலைவர்  பன்னீர்செல்வம் வரவேற்றார். மாவட்ட தலைவர் ரவி, சோக்சிவானந்தம் மற்றும் இதர வணிகர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தமிழக முதல்வர் கடந்த சட்டமன்ற தொடரில் 110 விதியின் கீழ் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்படுகிறது எனவும் அரசாணையை வெளியிட்டார்.அதன்படி அனைத்து நகராட்சி,பேரூராட்சி,ஊராட்சி பகுதிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டும்,அறிவுறுருதத்தப்பட்டும் வருகிறது.அதன்படி ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக்   விரிப்பு, பைகள், தட்டுகள் ,உறிஞ்சு குழாய்கள், முலாம் பூசப்பட்ட தேனீர் கோப்பைகள்,  தூக்கு பைகள், கொடிகள் ,தண்ணீர் பாக்கெட்டுகள் இவற்றைத் தவிர்ப்பது  எனவும் அத்தோடு  ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம் எனவும்  விவரித்து இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் ஸ்ரீமுஷ்ணம் பகுதி அனைத்து வணிகர்கள்,பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.