உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, December 16, 2018

ராமர்கோவில் கட்ட வலியுறுத்தி சேத்தியாத்தோப்பில் விஷ்வஹிந்த் பரிட்ஷத் பேரணி



ராமர்கோவில் கட்ட வலியுறுத்தி சேத்தியாத்தோப்பில் விஷ்வஹிந்த் பரிட்ஷத் பேரணி நடைபெற்றது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கிளாங்காடு விநாயகர் கோவிலிருந்து புறப்பட்ட இந்த பேரணியில் தென் அமெரிக்காவிலுள்ள அர்ஜென்டினாவைச்சேர்ந்த மாதாஸ்ரீகுரு திரிபுரசுந்தரி,யுகஸ்ரீ கருடாணந்தா சுவாமிகள் ஆகியோர் ராமர்கோவில் கட்டுவோம் என்ற கோஷம் ஒலிக்க, விஷ்வஹிந்த் பரிட்ஷத் சேவை பிரிவு மருத்துவர் ஜெயமுரளிகோபிநாத் தலைமையில், பாரதிய ஜனதாகட்சியின் கடலூர் மேற்குமாவட்ட பொதுச்செயலாளர் கேபிடி இளஞ்செழியன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.பேரணியானது முக்கிய வீதிகளின் வழியாக சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலையருகில் உள்ள கேபிடி திருமணமகால் வந்தடைந்தது. பின்னர் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கு விஷ்வஹிந்த் பரிட்ஷத் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக போராடி  வருகிறது.இந்தியாவில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் பொதுமக்களிடம் இதுகுறித்த தெளிவை ஏற்படுத்தி வருகிறோம்.நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுக்கும் மேலாக காலதாமதமாகி வரும் இந்த வழக்கு விவகாரத்தில் உடனடியாக இந்துக்களின் மனகுமுறலையும்,அவர்களின் தூய்மைப்போராட்டத்தையும் கருத்தில்கொண்டு நீதிமன்றம் இனியும் காலதாமதப்படுத்தாமல் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கு அனுமதிக்கவேண்டும்.மேலும் மத்திய அரசானது இதுகுறித்து விரைவாக விவாதித்து அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கு சட்டம் இயற்றி அதன்படி அவ்விடத்தில் ராமர்கோவில் கட்டுவதற்காகத்தான் இந்த பேரணியும்,ஆலோசனைக்கூட்டமும் என்று பல்வேறு விஷயங்கள் இதில் விவாதிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் விஷ்வஹிந்த் பரிட்ஷத் நிர்வாகிகள் தவத்திரு மெய்த்தவம் அடிகளார்,ஞானகுரு,ஸ்ரீவேல்முருகன்,குருசுப்ரமணியன், குருவாயூரப்பன்,சேத்தியாத்தோப்பு பாஜக நகரத்தலைவர் ஜெயக்குமார்,செயலாளர் ராஜா,நடணமூர்த்தி,ஜெய்சங்கர்,மூர்த்திகுமார், சரவணன்,அன்பழகன்,பொறியாளர் வெங்கடேசன்,புவனை ஒன்றிய தலைவர் சிவஞானம்,கீரை ஒன்றிய தலைவர் கருணாநிதி, உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.