உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, December 16, 2018

சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் குறைகேட்பு ஆலோசனைக்கூட்டம்


சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு
விவசாயிகள் குறைகேட்பு ஆலோசனைக்கூட்டம்.கடலூர் மாவட்டம்
சேத்தியாத்தாப்பில் எம்ஆர்கேகூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது.இந்த
ஆலையின் நடப்பு கரும்பு அரவைப்பருவம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள
நிலையில் நேற்று ஆலையின் வளாகத்தில் ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம்
தலைமையில் கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஆலையின் வளாத்தில் உள்ள
நிர்வாக அலுவகத்தில் நடைபெற்றது.சர்க்கரை ஆலையின் ஆட்சியர் மணிமேகலை,துணை
தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.பின்னர்
நடைபெற்ற கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கரும்பு விவசாயிகள்
கரும்பு பயிரிடுவது, கரும்பு வெட்டி ஆலைக்கு அனுப்புவதில் உள்ள பல்வேறு
குறைபாடுகளை நிவர்த்தி செய்து தரவேண்டும் என ஆலையின் தலைவரிடம் கோரிக்கை
வைத்தனர்.அதன்படி அதிக சர்க்கரை சத்துக்கள் கொண்ட கரும்பு பயிரிடுவதற்கு
ஆலைநிர்வாகம் அதிகப்படியான பங்களிப்பை வழங்கவேண்டும்.கரும்பு டன்
ஒன்றுக்கு தற்போதுள்ள சுமார் இரண்டாயிரத்து அறுநூற்றி பத்து ரூபாயை
மாற்றி டன் ஒன்றுக்கு மூன்றாயிரத்திலிருந்து நான்காயிரம் ரூபாய்
வழங்குதல்,கரும்பு விவசாயிகள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருக்கும்
ஆலை நிர்வாகத்திற்கும், கரும்பு விவசாயிகளுக்கும் இடையேயான புதிய
நடைமுறையாக வருவாய் பங்கீட்டு முறையை செயல்படுத்த உள்ளதை ஆலை நிர்வாகம்
கைவிடுதல் வேண்டும்,ஆலைக்கு கரும்பு ஏற்றி வரும்போது உடனடியாக காக்க
வைக்காமல் இறக்கிடவேண்டும்,ஆலையின் வளாகத்திற்குள் உள்ள அனைத்து வாகன
ஓட்டுநர்களுக்கான கழிவறை வசதியை மேம்படுத்தி தரவேண்டும்,சேத்தியாத்தோப்பு
சர்க்கரை ஆலைப்பகுதியில் புதியதாக கரும்பு பயிரிடுவதற்கு விவசாயிகளை
ஊக்கப்படுத்தும் வகையில் ஆலையின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.நடப்பு ஆண்டில் கரும்பு அரவைக்கு திட்டமிடப்பட்டுள்ள சுமார்
இரண்டரை லட்சம் டன் கரும்பு அரவை முழுமையாக செய்தி அனைவரும்
ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும் என கரும்பு விவசாயிகள் அனைவரும் ஆலையின்
தலைவர் கானூர் பாலசுந்தரத்திடம் கோரிக்கை வைத்தனர்.கரும்புவிவசாயிகளின்
கோரிக்கைக்கு பதிலளித்த ஆலையின் தலைவர் கோரிக்கைகள் அனைத்து பரிசீலனைக்கு
ஏற்று சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடர்ந்து
வெற்றிகரமாகவும்,கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரக்ககூடிய
விதத்திலும் இயங்குவதற்கு தமிழக முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டு
அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கரும்பு
விவசாயிகளிடம் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் இயக்குநர்கள்அகரஆலம்பாடி
மதியழகன்,விஜிசிட்டிபாபு, சிவக்குமார்,ஆதிமூலம்,ஆலையின் தலைமை கரும்பு
அலுவலர் மணிமாறன்,அலுவலக மேலாளர் முனியம்மா,மாணிக்கராஜ்,தலமை பொறியாளர்
செங்குட்டுவன்,செல்வேந்திரன்,தொழிலாளர் நல அலுவலர் பன்னீர்செல்வம்,மாநில
சர்க்கரைப்பிரிவு செயலாளர் சண்முகம்,அண்ணா தொழிற்சங்க தலைவர்
சம்பத்குமார்,செயலாளர் மாரியப்பன்,திமுக  நிர்வாகிகள்
ஜெயராமன்,கருணாநிதி, செந்தில்நாதன், தவாக வீரசோழன் மற்றும் பல்வேறு
கூட்டுறவு சங்க தலைவர்கள்,நிர்வாககுழு இயக்குநர்கள்,கரும்பு
விவசாயிகள்,ஆலையின் அனைத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.