உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, December 15, 2018

சேத்தியாத்தோப்பு காவல் துறையின் வருடாந்திர கவாத்து பயிற்சி







சேத்தியாத்தோப்பு காவல் துறையின் வருடாந்திர கவாத்து பயிற்சி.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு காவல் துறைசார்பில் வருடாந்திர கவாத்து பயிற்சியானது சேத்தியாத்தோப்பு டிஜிஎம் மேல்நிலைப்பள்ளியியல் நேற்று காலை நடைபெற்றது.சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ஜவஹர்லால் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில் சேத்தியாத்தோப்பு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட சேத்தியாத்தோப்பு, சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையம்,சோழத்தரம்,ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில்,குமராட்சி,புத்தூர்,ஒரத்தூர் ஆகிய எட்டு காவல் நிலையங்களைச்சேர்ந்த காவல் ஆய்வாளர்கள்,உதவி காவல் ஆய்வாளர்கள்,சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள்,தனிப்படை பிரிவு போலீசார்,சிறப்பு தனிப்பிரிவு போலீசார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் இதில் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில் காவல் துறையின் சார்பில் காவலர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகளின் அடிப்படையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மேலும் காவலர்களின் பணி, உடல்நலன்,பணியாற்றும் சூழல்,ஆவணங்கள்,பயிற்சிகள் உள்ளிட்ட பலவற்றை சேத்தியாத்தோப்பு காவல் உட்கோட்ட டிஎஸ்பி ஜவஹர்லால் கேட்டறிந்தும்,ஆவணங்கள்,காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட கருவிகள் போன்றவற்றை பார்வையிட்டு அதன் பயன்பாடு, அதனை பாதுகாத்தல்மற்றும் வருகின்ற புத்தாண்டில் அனைத்து காவலர்களும் சிறப்பாகவும்,உற்சாகமாகவும் இன்னும் சிறப்பாகவும்  பணியாற்றவேண்டும் என அதுப்பற்றிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.சுமார் ஒரு மணிநேரம் இந்த வருடாந்திர கவாத்து பயிற்சியானது நடைபெற்றது.முடிவில் சிறப்பாக பயிற்சியில் பங்கேற்ற அனைத்து காவலர்களுக்கு டிஎஸ்பி ஜவஹர்லால் பாராட்டு தெரிவித்தார்.